Loading. Please wait...


முதல் அடியை இங்கே எடுத்து வையுங்கள்
இன்றே தொடங்கட்டும் நல்ல மாற்றம்

உண்மையான துணையும் சிறப்பான வழிகாட்டலும் இருந்தால் கடினமாகத் தெரியக்கூடிய எந்தப் பெரிய மாற்றங்களையும் நம் வாழ்க்கையில் சாதித்து விடலாம்.
இலக்குகளை நிர்ணயித்து; சவால்களை கடந்து; லட்சியங்களை அடையத் துடிக்கும் உங்கள் பயணத்தில் எங்கள் உளவள சாதனை முறைகளும் பயிற்சிகளும் பெரும் துணை புரிகின்றன.

என்ன செய்கிறோம்தொடங்குங்கள்உங்கள் பயணம்
இங்கே தொடங்குகிறது

வாழ்வின் பல்வேறு அம்சங்களுக்கான ஆரோக்கியம் தரும் சாதனை பயிற்சிகளை வழங்குவதே லோட்டஸ் டுடே யின் பணி.
இலக்குகளையும் இலட்சியங்களையும் அடைவதற்கான உள வள யுக்திகளையும் நுட்பங்களையும் நாம் செயல்முறை பயிற்சிகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மேலும் அறியமுயன்றால் முடியும்இலவச நூல்கள்
பயின்ற சாதனை முறைகளை  மீள ஞாபகமூட்டி உங்கள் புரிதலையும் நம்பிக்கைகளையும்   ஆளப்படுத்துவதற்கு இந்த படைப்புக்கள்  அருமையான வழிகாட்டிகள்.

இங்கே பெறலாம்


இலவச காணொளிகள்
அமைதியும் ஆற்றலும் நிறைகின்ற போது மனம் உற்சாகத்துடன் செயல் வலிமை கொள்ளும் அல்லவா அதற்காக  உருவாக்கப்பட்டவையே  இந்தக் காணொளிகள்.

இங்கே பெறலாம்


இன்றே இணையலாம்
ஆளுமை முன்னேற்ற செயலமர்வுகள் – கருத்தரங்குகள் – தியான நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் மற்றும் திகதி விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும் வாசிக்க


இலவசம்: முயன்றுதான் பாருங்களேன்
முயற்சி செய்பவர்களை ஊக்குவிப்பதில்  நாம் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். முதல் படியை எடுத்து வைக்க விரும்பும் உங்களுக்கு முதல் ஆலோசனை முற்றிலும் இலவசம்.
சாம் தினேஷ் – known TV personality

சேர்ந்து சாதிக்கலாம் வாருங்கள்


தொழில், படிப்பு, உறவுகள், ஞானத் தேடல் என்று வாழ்வின் பல்வேறு அம்சங்களில் முன்னேற முயலும் பலர் சாதிக்கவும் முன்னேற்றம் காணவும் வழிகாட்டிய அனுபவம் கொண்ட உளவள செயல்முறை வழிகாட்டியும் பயிற்றுவிப்பாளரும் ஆவார்.
ஆழ்மன குழப்பங்களில் இருந்து விடுதலை அடைந்து ஒவ்வொருவரும் முழுமையான ஆற்றலுடன் உயரிய அர்த்தத்துடன் வாழும் வல்லமை கொண்டவர்கள் என்பதை உணர்த்துவது இவரது பயிலரமர்வுகளின் சிறப்பு அம்சம்.
நவீன உளவியல் முதல் ஆத்மயோகம் வரை மனித மேம்பாட்டுக்கு வெற்றிகரமாக உதவும் அணைத்து உளவள மார்க்கங்களும் திறந்த மனதோடு எம்மால் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகின்றன.
சாம் தினேஷ் தத்துவத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ஐரோப்பாவில் நன்கு மதிக்கப்படும் தொலைக்காட்சி பிரமுகர். தற்காலத்தில் மன ஆளுமை மேம்பாட்டுத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் என்.எல்.பி. (neuro linguistic programming)எனப்படும் மனித உணர்வுசார் மொழியியல் அமைப்பாக்கத் துறையில் தகுதிவாய்ந்த பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார். ஹிப்னோதெரபி மற்றும் ஹீலிங் துறையில் அனுபவமும் கடந்த 15 ஆண்டுகாலம் பலவிதமான மன வலிமை மற்றும் தியான முறைகளை பயிற்சியாக பின்பற்றி வருவதுடன் மனித வாழ்க்கை மேம்பாட்டுத் துறையில் நீண்டகால ஆய்வுகளை செய்து வருபவர்.
http://tamil.lotustoday.com/wp-content/uploads/sites/3/2015/11/sign_dinesh.png

Book Dinesh For An Event Today

http://tamil.lotustoday.com/wp-content/uploads/sites/3/2015/11/about_profile.png
நாங்கள் சொல்லவில்லை

பயனடைந்தவர்கள் சொல்கிறார்கள் அனுபவம் பேசுகிறது
சில ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்பாராதவிதமாக என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு திருப்பம் எல்லா விதத்திலும் ஒரு விரக்தியை உண்டு பண்ணி இருந்த காலம். வாழ்க்கை பள்ளத்தில் போய்க்கொண்டிருந்த நேரம். அப்போதுதான் நண்பர் ஒருவரின் சிபாரிசின் பேரில் சாம் தினேஷ் அவர்களை சந்தித்தேன். அவரது உளவள பயிற்சிகளும்  வழிகாட்டல்களும் என்னுள் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கின. விரக்தியில் இருந்து விடுபட முடிந்தது. ஆத்மீக ரீதியாக பல முன்னேற்றங்களைக் கண்டேன். இப்போது மறுபடியும் மகிழ்ச்சியாகவும் முன்னேற்றங்களுடனும் வாழ்க்கை நகர்வதாக உணர்கிறேன்.

பரன்

கணக்காளர்மன ஆளுமையை (Personal Development) விருத்தி செய்வதற்கு என்.எல்.பி. (N L P ) என்னும் உளவியல் முறை மிகவும் பயனுள்ளது என்று பலதடவை படித்திருக்கிறேன். அதனை தமிழர்  தாய் மொழி தமிழில் தினேஷ்  பயில்விக்கிறார்  என்று கேள்விப்பட்டதும் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது.  எனவே அவரை சென்று சந்தித்தேன். குறிப்பாக தினேஷ் ஹிப்னோதெரபியையும் சேர்த்து எனக்குள் பாரிய ஏற்றங்களை உருவாக்குகிற முறையில் அதனை செய்கிற விதம் அற்புதமானது.

ராஜன்

விரிவுரையாளர் & கணக்காளர்எனது பெயர் முகுந்தன்.
எனக்கு 27 வயது ஆகிறது. சிறு வயது முதலே நண்பர்களால் அதிகளவு கேலிக்கும் நக்கலுக்கும் உள்ளானதால் எனக்கு தெரியாமலே எனக்குள் ஒரு தாழ்வு மனப்பாண்மை, என்னால் எதுவும் முடியாது , என்னை இந்த சமூகம் ஏற்று கொள்ளாது என எனக்குள்ளே பல வறையறைகளை போட்டு வாழ்ந்து கொண்டிருந்தேன். சாதிக்க தேவையான திறமையும் சந்தர்ப்பமும் அமைந்தாலும் எதோ ஒன்று என்னை தடுத்துக்கொண்டே இருந்தது. இதுவரை காலமும் அதற்கு காரணம் தெரியாமலேயே இத்தனை நாட்களையும் கடந்து வந்துள்ளேன்.என் மீது என்க்கே எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை.எந்த விடயத்திலும்.இந்த உலகைத்தை பார்த்து ஒரு பயம் எப்போதும் எனக்குள்ளே இருந்து வந்துள்ளது.இதற்கு என்ன செய்யலாம் என்று நான் பலமுறை முயற்சி செய்துள்ளேன். ஆனால் எதுவும் கைகூடவில்லை. ஆனால் இதற்கு இதற்கு மிக முக்கிய காரணம் நான் என்பதையும், இதற்குரிய தீர்வு எனக்குள்ளே தான் இருக்கின்றது என்பதனையும் நான் தினேஷை பார்க்கும் வரைக்கும் உண்ரவில்லை. இங்கு வந்த பிறகு தான் நான் யார் என்பதை உணர முடிந்தது. என்னால் எது முடியும் எது முடியாது என்பதனை வரையறை செய்ய முடிந்தது. ஒரு மனதைரியம்,எந்த சவாலையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை என்பதனை வளர்த்துகொண்டேன்.இந்த உலகத்தை கண்டு அஞ்சுவதை நிறுத்திக்கொண்டேன்.எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதி இங்கு வந்து மன வள கல்வியை கற்ற பின்னர் உணர்ந்து கொண்டேன்.அது மட்டும் அல்லாமல்.நான் ஒரு ஊடகத்தில் அறிவிப்பாளனாக பணி புரிகின்றேன். இந்த கல்வி முறை அந்த துறையிலும் என்னை வேறு வடிவம் கொள்ளச் செய்தது.என் சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என் மனம் என்பதனையும் அதனை கையாள்வதற்கான திறனையும் நான் இங்கு வந்து கற்று கொண்டேன்.
இந்த கற்கை நெறியை முடித்த பின்னர் இப்பொழுது இருக்கும் எனக்கும் அதனை ஆரம்பிப்படதற்கு முதல் இருந்த எனக்கும் நிறைய மாற்றங்களை நான் மட்டும் அல்ல.என்னை சுற்றி இருப்பவர்கள் கூட கண்டு வியந்து இருக்கின்றார்கள்.என்னைப்போல பல பேர் இப்படி சொல்ல முடியாத பல பிரச்சனைகளை மனதில் சுமந்த படி,இந்த உலகத்தை கண்டு அஞ்சி ஒரு போலியான வாழ்க்கையை வாழந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆக இவர்களுக்கு நான் சொல்லும் ஒரே விடயம் .இது தான். என்று சொல்லுவார்கள். இந்த கற்கை நெறி உங்களை யார் என்று உங்களுக்கு உணர்த்தும்.அந்த உணர்வு உங்களை பல இமாலய இலக்குகளையும் தகர்த்து எரியச்செய்யும்.
என்று சொல்லப்படும் அந்த சின்ன குறுகிய வட்டத்திற்குள் இருந்து உங்களை வெளியே கொண்டு வர செய்து நீங்களே வியக்கும் படி பல மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும்.ஒரு மாயாஜாலம் மாதிரி உங்கள் வாழ்க்கை முழுதாக மாறும். வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். உங்களுக்கும் வாழ பிடிக்கும். இந்த உலகத்தை ரசிக்கப் பிடிக்கும்.ஒவ்வொருவருக்கும் என் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்ற பல கனவுகள் இருக்கும்.ஆனால் அதை அடந்தவர்கள் மிக குறைவே. இந்த கற்கை நெறி உங்களை உங்கள் கனவுகளை நீங்களாகவே அடைய முழுமையாக உதவி செய்யும்.இந்த கற்கை நெறியை தொடர்ந்தால் அத மாற்றத்தை நான் உணர்ந்தது போல நீங்களும் உணர்வீர்கள்.இந்த கற்கை நெறியை பூர்த்தி செய்த பிறகு என் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களையே இங்கு உங்களோடு பகிர்ந்து கொண்டு இருகின்றேன்.எனக்கு தெரியும் என் மனநினலையில் இருக்கும் பலருக்கு ஏமாற்றம் என்பது எப்படி வலிக்கும்.காரணம் பல ஏமாற்றங்களை நானும் கடந்து வந்து இருக்கின்றேன். ஆக இதை நான் உங்களை ஏமாற்றுவதற்கோ, அல்லது இந்த கற்கை நெறிக்கான விளம்பரத்திற்காகவோ உங்களிடம் சொல்லவில்லை.உண்மையில் உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை விரும்பினீர்கள் என்றால் அதற்குரிய முதல் படி ,ஆரம்ப புள்ளி இந்த கற்கை நெறியாக தான் இருக்கும் என்பது என் திடமான் நம்பிக்கை.வாழ்க்கை வாழ்வதற்கே.உங்கள் வாழ்க்கை பயணமும் சிறப்பாய் அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நன்றி

ஜீவா முகுந்தன்

Creative Artistவெளிநாட்டு வாழ்க்கையைப் பொறுத்தவரை நேர முகாமைத்துவம் பெரியளவில் அவசியமானது. அதிலும் பகுதி நேர வேலையும் முழுநேரப் படிப்பும் என்று வரும்போது பெரும்பாலான வேளைகளில் உடல் அசதியும் உளச் சோர்வும் காணப்படுவது வழக்கம். சில சமயத்தில் என்னடா இந்த வாழ்க்கை போட்டு அலைக்கழிக்கின்றதே என்ற விரக்தியான தன்மையும் தோன்றியதுண்டு. இந்த வேளையில் தினேஷ்குமார் உளவியல் பயிற்சிகளை மேற்கொள்வதை அறிந்து அவரை அணுகி எனது சிக்கல்களை குறிப்பிட்டேன்.

சுமார் 4 வருடங்களுக்கு முன்பாக அவர் எனக்கு நேரமுகாமைத்துவம், மனச்சோர்விலிருந்து விடுபடுட்டு வாழும் தன்மை, தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் என பல விடயங்களை பயிற்சியளித்தார். இதன் காரணமாக பெரியளவிலான சவாலான விடயங்களை மிகவும் இலகுவாகக் கையாள்வதற்கு என்னால் முடிந்தது. உயர்கல்வியைச் சிறப்பாக முடித்ததோடு கற்ற கல்வியோடு இணைந்த தொழிலிலையும் தற்போது நான் செய்வதற்கு தினேஷ் குமார் வழங்கிய உளவியற் பயிற்சியே பெரியவில் உதவியது.

இன்னுமொரு முக்கிய விடயம் அவரோடு நாங்கள் தெளிவாகவும் தனிப்பட்ட விடயங்களை வெளிப்படையாகவும் பேசுவதற்கு இலகுவாக தினேஷ்குமார் மிகுந்த நட்போடு நம்மோடு உரையாடுவார். எமது ஆளுமை தொடர்பான சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் அவரோடு கதைத்தோம் என்றால் இரகசியம் பேணப்படுகின்றதன்மையும் அவரிடத்தில் இருக்கின்றது. அவரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பயிற்சிகளைப் பெற்ற நான் இன்றுவரை அதன் பலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன்.

தி. சண்

பொறியிலாயலார்

நாம் என்ன செய்கிறோம்?

எமது சிறப்பு அம்சங்கள்

நிறைவு நோக்கிய வாழ்க்கைப் பயணத்தில் என்னென்ன அம்சங்களில் நாம் எமது சேவை பயன்படுகிறது என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.

http://tamil.lotustoday.com/wp-content/uploads/sites/3/2015/12/relationships-320x320.jpg

சேர்ந்து வாழ்தல்

உறவுகள்


உறவுகளே வாழ்க்கைக்கு அர்த்தம் தருகின்றன. காதல், குடும்ப உறவுகள் , தொழில் சார் உறவுகள், நட்பு எதுவாக இருந்தாலும் இவை அன்றாட வாழ்வின் மிக முக்கியமான அங்கங்கள். உறவுகள் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்தி அர்த்தம் காணவும், அகத்தில் எம்மை நாமே சீர்படுத்துவதன் ஊடாக எவ்வாறு எம்மைச் சுற்றிய உறவுகளை ஆரோக்கியமாக செம்மைப்படுத்தலாம் என்பதற்கான நடைமுறை வழிகளை நீங்கள் அனுபவித்துப் பயின்று நன்மை காணலாம்.


http://tamil.lotustoday.com/wp-content/uploads/sites/3/2015/12/career-320x320.jpg

பொருளீட்டல்

தொழில்


செய்யும் தொழிலில் முன்னேற, புதிய விருப்பத்துக்குரிய தொழிலை அமைக்க, முக்கியமான சில மாற்றங்களை உருவாக்க நீங்கள் எண்ணினால் எமது அமர்வுகளும் நிகழ்வுகளும் அதற்கு பெரிதும் துணை புரியும்.  இலக்குகளை அடைவதற்கான உபாயங்களையும் உளப்பாங்குகளையும் இனங்கண்டு அவற்றுக்கு செயல் வடிவம்  கொடுப்பதே உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும். இந்த பயணத்தில் உங்களோடு நாம் கரம் கோர்க்கிறோம்.


http://tamil.lotustoday.com/wp-content/uploads/sites/3/2015/12/Life-320x320.jpg

அத்தனையும்

வாழ்க்கை


இலட்சியக் கனவுகளை அடையும் பயணம் முக்கியமானது. அதனை முழுமையாக அனுபவிக்கவும் மகிழ்ச்சியுறவும் வேண்டுமானால் சிறப்பான உடல் – உள ஆரோக்கியம் இருத்தல் அவசியம். எனவே ஆரோக்கியமற்ற பழக்கங்களில் இருந்து விடுபடல் உள்ளிட்ட வாழ்வின் வெவ்வேறு அம்சங்களிலும் இலக்குகளை நிர்ணயித்து செயல்முறை பயிற்சிகளை பயின்று முன்னேறுவது எல்லா வகையிலும் நிறைவான வாழ்வுக்கு வழிகோலும்.


http://tamil.lotustoday.com/wp-content/uploads/sites/3/2015/12/Discovery-320x320.jpg

உன்னையே நீ அறிவாய்

நான் யார்


அனுபவமும் அறிவுப்பசியும் பல நேரங்களில் வாழ்க்கை குறித்த முக்கிய கேள்விகளை எழுப்பிவிடுகிறது. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டு கொள்ளும் போது எம்மையே நாம் அறிந்து கொள்கிறோம். எமது செயலமர்வுகள் எமக்குள் உறங்கும் அற்புதமான ஆற்றல்களை வெளிக் கொண்டு வரவும் – வாழ்வுக்கான ஆழமான அர்த்தங்களை கண்டு பிடித்து புத்தூக்கத்துடன் பயணிக்கவும் துணை செய்யும் வகையில் நடக்கின்றன.

தொடர்புகளுக்கு


Local Appointments + Online Meetings

hello@lotustoday.com

+(44)20 8133 7020

logo_web_lotus_today_footer

வேர் சேற்றிலே புதைந்திருந்தாலும் எப்போதும் நீர் மட்டத்துக்கு மேலே வந்து மலர்வது தாமரை. உயர்வுக்கும் புனிதத்துக்கும் அழகுக்கும் அடையாளமாய் போற்றப்படுவதும் தாமரையின் சிறப்பு.
இது போன்று நாம் எந்த சூழலில் பிறந்தாலும் உயர்வான எண்ணங்கள் நம்மை உயர்த்தும் என்னும் நம்பிக்கையில் மனித நேயத்தையும் மனித மனங்களின் அற்புதமான ஆற்றலையும் ஒவ்வொருவர் வாழ்விலும் பூக்கச் செய்யும் நோக்கில் உருவானதே லோட்டஸ் டுடே. மனிதர்களின் வாழ்வு தாமரை போன்று மலர்ந்து பரவும் பொழுது இவ்வுலகே அற்புதமான பூஞ்சோலையாக தோன்றும்.
நன்றே செய் அதை இன்றே செய் என்ற கூற்றுக்கு இசைவாக இன்றே தாமரை போலாகுவோம் என்னும் அர்த்தப்பட மலர்ந்ததே இந்தப் இணையப் பெயர்.

Copyright by Lotus Today 2017. All rights reserved - Made with Love by Digitalmakkr Digitalmakkr